கூலி படத்தின் முக்கிய அப்டேட் நாளை ரிலீஸ் என படக்குழு அறிவிப்பு...!

coolie

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


இதன் காரணமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் கூலி படத்தை அதிகப்படியான தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், கூலி படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கூலி படத்தின் டீசர் குறித்த அப்டேட்-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story

News Hub