அப்துல் கலாமின் பயோபிக் எடுப்பது சுலபம் கிடையாது : இயக்குனர் ஓம் ராவத்

om raut

அப்துல் கலாமின் பயோபிக் குறித்து அப்படத்தின் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இட்லி கடை குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
மேலும், "தேரே இஸ்க் மெயின்' என்ற படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், எதிர்பாராத விதமாக ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் 'கலாம் - தி மிஷைல் மேன் ஆஃப் இந்தியா' என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.


 
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஒவ் ராவத், "அப்துல் கலாமின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பது கலைச்சவால் கொண்டது. ஒரு கலாசாரா பொறுப்பு. கலாமின் வாழ்க்கை உலகளவிய இளைஞர்களுக்கும் குறிப்பாக தென்னிதிய இளைஞர்களுக்கும்
உத்வேகம் அளிக்கக் கூடியது. அவருடைய வாழ்க்கை ஒரு பாடம். " எனத் தெரிவித்துள்ளார்.

Share this story