மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்...!

maanaadu

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மாநாடு. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.


வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. ’மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அண்மையில்  ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. 

 

Share this story