"மழைப் பிடிக்காத மனிதன்" சலீம் படத்தின் தொடர்ச்சியா..? ரசிகர்கள் கருத்து..

விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் மழைப் பிடிக்காத மனிதன். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சலீம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் சலீம், அமைச்சரின் மகனை கொன்று விட்டு தப்பித்து விடுவார். அங்கிருந்து தப்பித்து விஜய் ஆண்டனி ஏஜெண்டாக மாறும் கதைதான் மழை பிடிக்காத மனிதனின் கதைக் களமாக உள்ளது. இயக்குனர் விஜய் மில்டன் எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் சொல்ல வந்த கருத்து இரண்டுமே நன்றாக இருப்பதாகவும் தீமை செய்பவன் அழியவேண்டும், தீமை தான் அழிய வேண்டும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறிய விஷயம் வெறலெவல் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பு கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கருத்து நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.