‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், ரிலீஸ் தேதி இதோ.

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ இந்த படத்தை ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கியுள்ளார். இவரது ஜல்லிக்கட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தில் மோகன்லாலின் கேரக்டர் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஃபஸ்ட் லுக் போஸ்டரில் மோகன்லால் அமர்ந்துக்கொண்டு துணியை வீசி மாயம் செய்கிறார். தொடர்ந்து படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.