நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணமா? அவரே போட்ட பதிவு...!
மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல மார்க்கெட் இருக்கிறது. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.பேட்ட, மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர், தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 15 ம் தேதி வெளியாகவுள்ளது.இதற்கிடையில், மாளவிகா மோகனன் நேற்று எக்ஸ் தலத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது ஒருவர், எப்போது நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் ? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், "திருமணம் செய்து கொள்ள ஏன் என்னை அவசரப்படுத்துகிறீர்கள்? என்று பதில் அளித்துள்ளார்.
Why you in a rush to see me married? :( https://t.co/epaOAhywvs
— Malavika Mohanan (@MalavikaM_) July 31, 2024