மாளவிகா மோகனன் பிறந்தநாள் : தங்கலான் படக்குழு வாழ்த்து
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகா மோகனை வாழ்த்தி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாளவிகா இப்படத்தில் ஒரு சூனியகாரி ஆராத்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Anyone who dared to question her existence, knew it through her wrath ❤️🔥
— Studio Green (@StudioGreen2) August 4, 2024
Wishing our strong and fierce, Aarathi, @MalavikaM_ a wonderful birthday and a gleaming year ahead 💫#HBDMalavikaMohanan#ThangalaanFromAug15@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen… pic.twitter.com/9nH0AFjKVn