தங்கலான் பட புரொமோஷனுக்கு மாளவிகா மோகனன் சிவப்பு நிற உடை மட்டுமே அணிந்தது ஏன்?
1723642039452
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தங்கலான்.விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அதாவது நாளை தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார், அவர் கதாபாத்திரத்தின் மேக்கப் பணிகள் மட்டுமே 4 மணி நேரம் நடைபெற்று இருக்கிறது.படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சிலம்பம் கற்றுக்கொண்டு அதிக ரீ-டேக் வாங்கி நடித்ததால் கையில் வீக்கம் எல்லாம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நடித்து முடித்துள்ளார். மேலும், அவர் திரையில் வரும் காட்சிகள் அனைத்தும் சிவப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது. அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரொமோஷன் நிகழ்ச்சிக்கும் மாளவிகா சிவப்பு நிற புடவையில் வந்துள்ளார்.