‘தங்கலான்’ டப்பிங்கில் மாளவிகா மோகனன்.

photo

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகிவரும் தங்கலான் படத்தின் டப்பிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது பங்கிற்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளார்.


சியான் விக்ரம், பா. ரஞ்சித் முதல் முறையாக கூட்டணி அமைத்து தயாராகியுள்ள படம் ‘தங்கலான’. கேஜிஎப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிரட்டும் விதமாக விக்ரமின் தோற்றம் இந்த படத்தில் அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நகர்வதால் படத்திற்காக படக்குழு நிறைய மெனக்கெடல்களை செய்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டப்பிங் நடந்து வருகிறது. அந்த வகையில் மாளவிகா தனது பங்கிற்கான டப்பிங்கை முடித்துள்ளார். அதற்கான வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில் அவர் வசனம் எதுவும் பேசாமல் கத்துகிறார். படத்தில் தனக்கு வசனம் இல்லை என சியான் கூரிய நிலையில் மாளவிகாவுக்கும் வசனம் கிடையாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this story