'தங்கலான்' பட நடிகரை லண்டனில் சந்தித்த மாளவிகா மோகனன்

'தங்கலான்'  பட நடிகரை லண்டனில் சந்தித்த மாளவிகா மோகனன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் 'தங்கலான்'. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

'தங்கலான்'  பட நடிகரை லண்டனில் சந்தித்த மாளவிகா மோகனன்

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் லண்டன் சென்றுள்ளார். தங்கலானில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோவை அங்கு அவர் சந்தித்துள்ளார். இருவரும் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Share this story