'பெருசா ஒன்னும் இல்ல, ஒரு டவல் போதும்' – அட…… மாளவிகா என்ன சொன்னார் தெரியுமா!

photo

பிரபல நடிகையாக வலம்வரும் மாளவிகா மோகனன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

photo

கவர்ச்சிக்கு குறைவைக்காமல் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிடும் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானது ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தான், அந்த படத்தில் பெரிதாக ரோல் இல்லை என்றாலும் தொடர்ந்து தளபதி விஜய்- லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.  அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் ஜோடி சேர்ந்தார்.  இவர் என்னதான் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலும் அதற்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடிக்கவில்லை, மாறாக பல ட்ரோல்கள், விமர்சனங்களை மட்டுமே சந்தித்தார். காரணம் ஹீரோயின் வேண்டுமே என்பதற்காக சும்மா படம் முழுக்க அங்கும் இங்கும் ஓடுகிறார், அவருக்கான கதாபாத்திரம் டம்மிதான் என பேசப்பட்டது. கதை தேர்வு சரியில்லை என விமர்சித்தனர்.

photo

இந்த நிலையில் இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக சிலம்ப பயிற்சியெல்லம் எடுத்துக்கொண்டு வெறித்தனமாக தயாரானார். அதன் ஒரு பகுதியாக தனது ஃபிட்னஸ் மீதும் அதீத கவனம் செலுத்த தொடங்கி பல ஒர்கவுட்டுகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அப்படியான பதிவு ஒன்றைதான் தற்போது பகிந்துள்ளார். அதற்கு கேப்ஷனாகஎளிமையான உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு டவல் அல்லது யோகா பாய் இருந்தால் போதும் என்றும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு சில நிமிடங்களுக்கு இந்த உடற்பயிற்சியை செய்து நமது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this story