'மாளவிகா மோகனன்' பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தங்கலான்’ படலுக்.

photo

மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு அவரது கதாபாத்திரத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

photo

மலையாளத்து பைங்கிளியான மாளவிகா கடந்த 2013ஆம் ஆண்டு துல்கருடன் இணைந்து ‘பட்டம் போலே’ எனும் மலையாள படம் மூலமாக தனது திரை வாழ்வை துவங்கினார்.  தொடர்ந்து படங்கள் நடித்துவந்த மாளவிகா தமிழில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் பூங்கொடியாக நடித்து நமக்கு அறிமுகமானவர்.  தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்திற்காக சண்டை பயிற்சி, சிலம்ப பயிற்சியெல்லாம் கற்றுகொண்டார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மாளவிகாவின் தங்கலான் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் கையில் வேல்கம்பு கத்தி, கழுத்தில் நிறைய பாசி மாலை, தலையில் கிரீடம், கைகளில் காப்பு  உடலில் பச்சை என பார்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். இந்த போஸ்டரை பார்த்த பலருமே மாளவிகாவின் லுக்கை பார்த்து வியந்துள்ளனர்.

Share this story