பேட்ட திரைப்பட நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்

பேட்ட திரைப்பட நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் இடம் பெற்றது. மூலம் தமிழில் முன்னணி நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்தார். தற்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளா். தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

null

இந்நிலையில், பேட்ட திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகை மாளவிகா மோகனன் படம் குறித்தும், ரஜினி குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பேட்ட படம்தான் என் முதல் தமிழ் படம். இதில்  நடிக்க நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம் ரஜினி சார் தான்.அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு. முதல் நாள் ஷூட்டிங்கின்போது அவர் உள்ளே வந்ததும் அனைவரும் அமைதியாகினர். என் முதல் காட்சி அவருடன் தான் என்பதால் என்னிடம் ரஜினி சார் நன்றாக பேசினார். அடுத்த நாள் படம் முழுவதும் என்னை அக்கறையுடன் பார்த்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

Share this story