‘டைரக்டர் பா.ரஞ்சித் இதைதான் என்கிட்ட கேட்டார், ரொம்ப கஷ்டமா இருக்கு’ – மாளவிகா சொல்வது என்ன!

photo

விக்ரமின் தங்கலான் திரைப்படத்தில் இயக்குநர் தன்னிடன் இதையெல்லாம் கேட்டதாக மாளவிகா மோகனன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

photo

விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணியில் தயாராகிவரும் திரைப்படம் ‘தங்கலான்’. கேஜிஎப் கதைகளத்தை மைய்யமாக வைத்து தயாராகிவரும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி என பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வீடியோ பலரையும் புருவம் உயர வைத்தது. அந்த அளவிற்கு சிறப்பாக படத்தை தயாரித்து வருகிறார் பா. ரஞ்சித்.

photo

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனனிடம் ஏன் இப்படி ஒல்லியாகிவிட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்” நான் ரஞ்சித சார் மற்றும் விக்ரம் சாருடன் தங்கலான் படத்தில் பணிபுரிகிறேன் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக உள்ளது, ஒரு போராளியைப் போல மிகவும் கனமானதாக இருக்க வேண்டும். அதனால் ரஞ்சித் சார் மிகவும் மெல்லிய உடல்வாகு, இறுக்கமான உடல்வாகு வேண்டும் என விரும்பினார். அதற்காக நான் பிரியாணி சாப்பிடுவதை  நிறுத்திவிட்டேன் கஷ்டமாக உள்ளது. கடினமான உடற்பயிற்சியில் இறங்கினேன் அதனால் தான் மொலிந்து விட்டேன். இந்த பாத்திரத்தில் நான் நடித்து  முடித்தவுடன் , மீண்டும் எனது கேக்குகளையும் பிரவுனிகளையும் சாப்பிடுவேன். என தெரிவித்துள்ளார்

 

Share this story