காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்.. யார் படம் தெரியுமா ?

malavika mohanan

நடிகை மாளவிகா மோகனன் காலை 6:34 மணிக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்காக சென்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பின்னர் விஜய்யின் "மாஸ்டர்," தனுஷின் "மாறன்," விக்ரமின் "தங்கலான்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், பிரபாஸ் நடிக்கும் "தி ராஜா சாப்" என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் அவர், தமிழில் கார்த்தி நடிக்கும் "சர்தார் 2" படத்திலும் நடித்து வருகிறார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.malavika mohanan

"சர்தார் 2" படத்தின் படப்பிடிப்புக்காக தான் காலை 6:34 மணிக்கு சென்றதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Share this story