‘தளபதி68’ படத்தில் விஜய்யின் தங்கை இவர்தானாம்! செம அப்டேட்.

photo

‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க இளம் நடிகை ஒருவர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

 தளபதி68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, மீனாட்சி சவுத்ரி, சினேகா,மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று இளமைகால விஜய் என்றும் தகவல்கள் வெளியானது இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஐதராபாத்தில் படு ஜோராக நடந்து வருகிறது.

photo

இந்த நிலையில் தற்போதைய தகவலாக இந்த படத்தில் விஜய்யின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடிகை மாளவிகா ஷர்மா நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இவர் சுந்தர் சி-யின் காபிவித் காதல் படத்தில் தமிழிலும், தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார். இதற்கு முன்னர் நடிகை இவானா நடிக்க போவதாக கூறப்பட்டது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share this story