தளபதி 68 படத்தில் இணைந்தார் மாளவிகா ஷர்மா

தளபதி 68 படத்தில் இணைந்தார் மாளவிகா ஷர்மா 

லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார்.  விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், பூஜை வீடியோ வெளியானது. இந்த காணொலி வாயிலாகவே, படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 


இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை மாளவிகா ஷர்மா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், விஜய்யுடன் இணைந்து திரையில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Share this story