சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் பஹத் பாசில்..! என்ன காரணம் தெரியுமா ?
Mon Jul 08 2024 5:52:43 PM

’கூலி’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கேட்ட கால்ஷீட் தேதிகள் தன்னிடம் இல்லை என்றும் ஏற்கனவே இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படத்திற்கு அதே தேதிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று லோகேஷ் கனகராஜ் இடம் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் உடன் ’வேட்டையன்’ திரைப்படத்தில் பஹத் பாசில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சில காட்சிகளில் நடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் ’கூலி’ படத்தில் பஹத் பாசில் நடிக்க முடியாது என கூறியது லோகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.