'குட் பேட் அக்லி' படத்தில் பிரபல மலையாள நடிகர்...!

GUB

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ’குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

shine tom chacko
இந்த நிலையில், இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் துணை வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில், விஜய்யுடன் "பீஸ்ட்" படத்தில் அறிமுகமானார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story