மலையாள முன்னணி நடிகர் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை குற்றச்சாட்டு

vincy

பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 


மலையாள சினிமாவில் போதைப்பொருட்கள் பயன்பாடு, பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இவரது குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘விக்ருதி’, ‘பீமன்டே வழி’, ‘ஜன கண மன’, ‘சௌதி வெல்லக்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வின்சி அலோஷியஸ். இவர் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான ‘ரேகா’ மலையாள படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், வின்சியின் நடிப்பு பாராட்டப்பட்டது.vincy

இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார் வின்சி. தற்போது அவர் படப்பிடிப்பு தளத்தில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அண்மையில் கேரளாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட வின்சி, “யாராவது போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர் என நான் அறிந்தால், அவர்களுடன் ஒருபோதும் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன்” என கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.இது தொடர்பான வின்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சம்பந்தப்பட்ட நடிகரின் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ள வின்சி, “நான் ஒரு படத்தில் முன்னணி நடிகருடன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த அந்த நடிகர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.vincy

 
தொடர்ந்து அவருடம் பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது நான் அணிந்திருந்த ஆடையை அவர் சரி செய்வதாக கூறினார். பலரும் கூடியிருந்த அந்த இடத்தில் அவர் என்னிடம், ‘நானும் உங்களுடன் வருகிறேன். நீங்கள் ரெடியாக நான் உதவி செய்கிறேன்’ என பேசியது என்னை மேலும் சங்கடப்படுத்தியது” என்றார். தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய அவர், “படப்பிடிப்பு தளத்தில் அவர் வாயிலிருந்து வெள்ளையாக ஏதோ ஒன்று டேபிளில் சிந்தியதை நான் பார்த்தேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் போதைப்பொருளை பயன்படுத்தினார் என்பதை அந்த தருணத்தில் உறுதிசெய்துகொண்டேன். அது சுற்றியிருப்பவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருவருடன் பணியாற்ற நான் விரும்பவில்லை. மற்றவர்களை தொந்தரவு செய்வதை தெரியாதவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன். என்னுடைய இந்த முடிவினால் எனக்கு சில பட வாய்ப்புகள் பறிபோயுள்ளது. இருப்பினும் மீண்டும் வெளிப்படையாக கூறுகிறேன். அப்படியானவர்களுடன் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்றார்.

Share this story