பிரபல மலையாள இயக்குநர் மீது நடிகை புகார்

Director

இயக்குனர் சனல் குமார் சசிதரன் மீது மலையாள நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

ஒழிவுதிவசத்தே காளி, எஸ். துர்கா, சோழா என தனது படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன். இவரது படங்கள் திரைப்பட விழாக்களில் திரையிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனிடையே அவ்வப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மஞ்சு வாரியரை காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.  இதையடுத்து டோவினோ தாமஸை வைத்து அவர் இயக்கிய வழக்கு படத்தை தியேட்டரில் வெளியாகுவதற்கு முன்பாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு காரணமாக டோவினோ தாமஸ் தான் படத்தை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அதனால் தான் படத்தை டிலீஸ் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மஞ்சு வாரியரை வைத்து அவர் இயக்கிய கயட்டம்(A‘hr Kayattam)படத்தின் கூகுள் ட்ரைவ் லிங்கை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இது மலையாளத் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. director

இந்த நிலையில் சனல் குமார் சசிதரன் மீது பிரபல மலையாள நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “பல்வேறு தளங்களில் இணையத்தின் வழியாக தகாத வார்த்தைகள் மற்றும் மிரட்டல் விடுகிறார். தவறாக நடந்து தனியுரிமையை மீறுகிறார். சமூக ஊடகங்களில் பல பதிவுகள் மூலம் தன்னை அவமதித்தும் டேக் செய்து தனது பெயரில் ஆடியோ குறிப்புகளையும் பகிர்ந்து வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரை அடுத்து சனல் குமார் சசிதரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this story