மவுசு கூடிய மல்லிப்பூ - 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘மல்லிப்பூ’ பாடல்!

photo

சிம்பு-இத்தானி கூட்டணியில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின்’ மல்லிப்பூ’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

photo

 விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்த படம் வழக்கமான கௌதம் மேனன் படங்களில் இருந்து சற்று மாறுபட்ட கதைகளத்தில் வெளியானது. இருந்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற ‘மல்லி பூ’ பாடல் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

photo

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இப்படி ஒரு பாடலா என பலருமே வியந்து, பாடலை வெகுவாக பாராட்டினர். தாமரை வரிகள் எழுதிய இந்த பாடம் வெளியான சமயத்தில் இணையத்தில் டிரெண்டடித்தது. மதுஸ்ரீ குரலில் ஒலித்த இந்த மல்லி பூ தற்போது வரை வாடாமல் மணம் வீசுகிறது. ஆம், வெந்து தணிந்தது படத்திற்கு உயிர் கொடுத்த ‘மல்லிப்பூ’ பாடல் தற்போது 100 மில்லியில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  

Share this story