ஓடிடிக்கு ஓடிவரும் "மாமன்" -எந்த தளத்தில் எந்த தேதியில் பார்க்கலாம் தெரியுமா ?

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் புகழ் பெற்றார் .அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் காமெடி ரோல் செய்து வந்தார் அதில் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது ,அதன் பின்னர் அவர் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்தார் .அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொட்டுக்காலி படத்தில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார் .இந்நிலையில் அவர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் ஹீரோவாக நடித்தார் .இந்த மாமன் படம் வெற்றி பெற்றது .இந்நிலையில் அந்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அந்த படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மாமன் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாக ரெடியாக உள்ளது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி படத்தின் சாட்டிலைட் உரிமைகளைப் பெற்றுள்ளதாகவும், Z5 ஸ்ட்ரீமிங் உரிமைகளைப் பெற்றுள்ளதாகவும் சமீபத்தில் படத்தின் நாயகன் சூரி தெரிவித்து இருந்தார். அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த வாரமும் மாமன் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ஒருவாரம் தாமதமாக அதாவது ஜூன் 27 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் மாமன் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.