தளபதி விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு!

1

எச் வினோத் இயக்கி இருக்கும் ”ஜனநாயகன்” படத்தில் மமிதா பைஜு, விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், விஜய் பற்றி மமிதா பைஜு பேசுகையில், “விஜய் சார் நேரம் தவறாதவர், படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். ரொம்ப கூல். ஜனநாயகன் படப்பிடிப்பில் என்ன நடந்தாலும், அதை ரொம்ப கூலாகக் கையாள்வார். நான் அவரிடம் பல விஷயங்களைப் பேசுவேன். அவர் அதற்கு ‘ம்ம்’ ‘ஹா’ன்னு சொல்வார்” என்றார்.

மமிதா பைஜு அடுத்ததாக விஷ்ணு விஷாலுடன் ”இரண்டு வானம்” , பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் , வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

Share this story