சூர்யா உடன் ஜோடி சேரும் மமிதா பைஜூ...அடுத்தடுத்து தமிழில் குவியும் வாய்ப்பு...

பிரேமலு மூலம் புகழ்பெற்ற நடிகை மமிதா பைஜூ சூர்யா உடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேமலு திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மமிதா பைஜூ. தற்போது தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். விஜய்யுடன் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மமிதா, தனுஷுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம் ஏப்ரல் அல்லது மே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்க பிரேமலு பிரபலம் மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜூ ஏற்கனவே வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வந்தார். அதன்பின் அதிலிருந்து சூர்யா, மமிதா இருவரும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகையான மமிதா தமிழிலும் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.