தொடர்ந்து நூறு கோடி வசூலிக்கும் படங்களில் நடித்து வரும் ஹீரோயின் யார் தெரியுமா ?

Mamitha baiju

கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ என்ற படம், ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் கே.கபூர் ஹீரோவாக நடித்தார். அதுவரை சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்த மமிதா பைஜு, இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது அவர் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். மீண்டும் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படமும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில், இணை எழுத்தாளர் கிரண் ஜோஷி கூறுகையில், ‘நாங்கள் ‘பிரேமலு’ படத்தை உருவாக்குவதற்கு முன்பே ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்ற படத்தின் கதைக்கான யோசனை கிரிஷ் ஏ.டி மனதில் இருந்தது. இப்படத்தின் டைட்டிலையும் அப்போதே முடிவு செய்துவிட்டோம். அதோடு, ஹீரோவாக நிவின் பாலி நடிக்க வேண்டும் என்பது வரை தீர்மானித்துவிட்டோம். அதற்கு பிறகே ‘பிரேமலு’ என்ற படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஏற்கனவே மனதில் உருவாக்கியிருந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தை இயக்க முடிவு செய்தார். தான் நினைத்தது போலவே நிவின் பாலியை ஹீரோவாக நடிக்க வைத்து, தனது வெற்றி நாயகியான மமிதா பைஜூவையே இதிலும் கதையின் நாயகியாக தேர்வு செய்தார்’ என்றார்.

Share this story