மமிதா பைஜுவின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் -எது தெரியுமா ?

Mamitha baiju

மலையாளத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்று, வசூலில் சாதனை படைத்த ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ என்ற படம், மமிதா பைஜுவின் திரையுலக மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய அவர், ‘தொடர்ச்சியான வெற்றி என்னை சந்தோஷப்பட வைத்துள்ளது. ‘சூப்பர் சரண்யா’ படம் ரிலீசாகாத நேரத்தில், இயக்குனர் கிரிஷ் ஏ.டி என்னிடம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தின் கதையை சொன்னார். அப்போதே இந்த கேரக்டரில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

எந்த நம்பிக்கையில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இப்போது வெற்றிவிழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் நான், இயக்குனருக்கு ‘நன்றி’ என்ற வார்த்தையை தவிர வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. ‘பிரேமலு’, ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ போன்ற படங்களில், என்னால் முதன்மை கதாநாயகியாக நடித்து, அப்படத்தை தாங்கி நிற்க முடியும் என்று எனக்கே நம்பிக்கை இல்லாத நிலையில், அவர் என்மீது தீவிர நம்பிக்கை வைத்தார். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்’ என்று கண்கலங்கினார். முன்னதாக மமிதா பைஜு, சில படங்களில் சிறுவேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story