வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’போஸ்டர் -மிஸ் ஆன மமிதா பைஜு பெயர்

Mamitha baiju

வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சூர்யாவின் 46வது படமான இதில் மமிதா பைஜு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராதிகா, ரவீணா டாண்டன், பவானிஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘பட்டாம்பூச்சி’  வெளியானது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், ஹீரோயின் மமிதா பைஜுவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சனம் ஷெட்டி, தனது சோஷியல் மீடியாவில் சராமரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘போஸ்டரில் ஹீரோயின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை? மற்ற நடிகர்களின் பெயர்கள் இருக்கும்போது, ஏன் அவரது பெயர் மட்டும் விடுபட்டிருக்கிறது? இது சிறிதுகூட நியாயமே இல்லை. இதுபோன்ற நடைமுறையை மாற்ற வேண்டிய நேரம் இது. திரையுலகில் மமிதா பைஜு தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பதால்தான், அவர் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க அழைக்கப்படுகிறார். ஒருவேளை அவர் அறிமுக நடிகையாக இருந்தாலும், சமமான அங்கீகாரம் பெற உரிமை கொண்டவர். திரைத்துறை இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். இதுபோன்ற நிலை வரிசையாக மாற வேண்டும்’ என்று குறிப்பிட்டு

Share this story