" சூர்யாவுக்காக நான் அழுதேன்" -மமிதா பைஜூ கூறிய தகவல்

Mamitha baiju

கேரளாவில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜு, ‘கடந்த 2015ல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள, கேரளாவில் இருக்கும் மாலிற்கு சூர்யா சார் வந்தார். அப்போது நான் 8ம் வகுப்பு மாணவி. எனது அண்ணன் 11ம் வகுப்பு படித்தான். அண்ணனும், அவனது நண்பர்களும் அந்த மாலிற்கு சென்று சூர்யாவை பார்த்தார்கள். என்னால் செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நான் அழுதேன். எனது அண்ணன் சூர்யாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டதை காண்பித்தான்.

மேலும் அழுதேன். இப்போது திருவனந்தபுரத்தில் அதே மாலில் சூர்யாவுடன் சேர்ந்து நிற்கிறேன். அவரது படத்தில் நடித்ததால் இங்கு வந்துள்ளேன். இதை நான் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். சூர்யா என் வாழ்க்கையில் நடத்திய மேஜிக் இது’ என்று நெகிழ்ந்தார். சூர்யா பேசும்போது, ‘கேரளா என்பது அன்பின் தேசம். இங்கு 20 வருடங்களுக்கு முன்பே இந்த அன்பு பதிவானது.

Share this story