மமிதா பைஜூ கைவசம் எத்தனை தமிழ் படங்கள் தெரியுமா ?

Mamitha baiju
தமிழில் விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், மமிதா பைஜூ. மேலும், மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ என்ற தெலுங்கு படத்தில் அவரது ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னதாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். அதற்கு பிறகு சாய் பல்லவி நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது மமிதா பைஜூவை இயக்குனர் வேணு யெல்தண்டி ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தில் ராஜூ தயாரிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பான் இந்தியா படமாக உருவாகிறது.

Share this story