மம்மூட்டி - மோகன் லால் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்...!

mohan lal

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் ஆகிய இருவரும் இணையில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. இப்படத்திற்கான பூஜை இலங்கையில் போடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.'டேக் ஆஃப்' மற்றும் 'மாலிக்' படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் தீபம் ஏற்றி படப்பிடிப்பு பணிகளை துவக்கி வைத்தார். இதற்கான பூஜை வீடியோவை படக்குழு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் தற்போது மம்மூட்டி ஒரு படத்தில் வில்லனாகவும், மோகன் லால் எம்புரான் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் இணைந்து நடிப்பதாக வெளியான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இருவரும் இணையில் உருவாக இருக்கும் படத்தை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கின்றார். இப்படத்தை சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோரும் இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தில், ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா, ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைய உள்ளனர்.இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தனும், நிர்வாக தயாரிப்பாளர்களாக ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் சி.வி. சாரதி ஆகியோரும் பணியாற்ற உள்ளனர். மேலும், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோசப் நெல்லிக்கல், ஒப்பனையாளராக ரஞ்சித் அம்பதி, ஆடைகள் வடிவமைப்பாளராக தன்யா பாலகிருஷ்ணன், புரொடக்சன் கண்ட்ரோலராக டிக்சன் போடுதாஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.

மேலும், லினு ஆண்டனி தலைமை இணை இயக்குநராகவும், பாண்டம் பிரவீன் இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் இருபெரும் ஆளுமைகளாக கருதப்படும் நடிகர்களான மோகன் லால் மற்றும் மம்மூட்டி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ரசிகர்களின் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். நடிகர்கள் மம்மூட்டியும், மோகன் லாலும் கடந்த 2008ம் ஆண்டு டிவெண்டி 20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story