'எல் 2 எம்புரான்' படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த மம்முட்டி..

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள `எல் 2 எம்புரான்' படக்குழுவிற்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ’லூசிஃபர்”. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
Nothing..absolutely nothing more special than wishes from the Patriarch of Malayalam cinema! Thank you Mamukka! ❤️❤️❤️ @mammukka https://t.co/SJKp54mMH3
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 26, 2025
எம்புரான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முன்பதிவு மட்டும் உலகமெங்கும் 58 கோடி ரூபாய்க்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் முதல் பாடலான ஃபிர் ஸிந்தா பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.
இந்த நிலையில், நாளை வெளியாக உள்ள 'எல் 2 எம்புரான்' படத்திற்கு பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, "எம்புரான் படத்தின் சரித்திர வெற்றிக்காக அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துகள்! இது உலகெங்கிலும் உள்ள எல்லைகளைக் கடந்து முழு மலையாளத் துறையையும் பெருமைப்படுத்துகிறது என்று நம்புகிறேன். அன்புள்ள மோகன்லால் மற்றும் பிருத்விராஜுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.