நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் பாதிப்பு...?

நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் தரப்பு விளக்கமளித்துள்ளது.
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனால் அவர் ரசிகர்கள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் இத்தகவலை மம்மூட்டி தரப்பு மறுத்துள்ளது. “அந்த செய்தியில் உண்மையில்லை. ரமலான் நோன்பு இருப்பதால் மம்மூட்டி, விடுமுறையில் இருக்கிறார். படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. விடுமுறைக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்” என்று அவர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.