மம்மூட்டி நடித்துள்ள பசூக்கா படத்தின் முதல் பாடல் வெளியீடு
Sat Apr 05 2025 7:13:51 AM

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான Loading Bazooka வெளியாகி உள்ளது.