மம்மூட்டி நடித்துள்ள 'பசூக்கா' படத்தின் ப்ரீ ரிலீஸ் டீஸர் ரிலீஸ்...

மம்மூட்டி நடித்துள்ள பசூக்கா படத்தின் ப்ரீ ரிலீஸ் டீஸர் வெளியாகி உள்ளது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
#Bazooka Pre Release Teaser !!
— Mammootty (@mammukka) April 9, 2025
In Cinemas Worldwide from Tomorrowpic.twitter.com/SP0BeLPITB
படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. பசூக்கா படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது . இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.