மம்முட்டியின் 'டொமினிக் & தி லேடீஸ் பர்ஸ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

mamotty
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். இதனிடையே இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.domnic இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் 23-ந்தேதி தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி இப்படத்தை படக்குழு வெளியிட உள்ளது.

Share this story