17 வருடங்களுக்கு பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்த படம் -டைட்டில் என்ன தெரியுமா ?
1769999453000
17 வருட இடைவெளிக்கு பிறகு மம்மூட்டி, ேமாகன்லால் இணைந்து நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘பேட்ரியாட்’. திரைக்கு வந்த ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ ஆகிய படங்களுக்கு பிறகு மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதி இயக்கி, ராகுல் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து எடிட்டிங் செய்துள்ளார். ஸ்பை திரில்லர் ஜானரில் உருவான இப்படம், வரும் ஏப்ரல் 23ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் போஸ்டரை அட்லீ, தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டா, இந்தி போஸ்டரை கரண் ஜோஹர், மலையாள போஸ்டரை துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென் கே.கபூர், நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட 40க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியிட்டனர். மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோரின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

