சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிரபல நடிகர் -எந்த நடிகர் தெரியுமா ?

mammutty

பிரபல நடிகர் மம்மூட்டி தமிழில் அழகன் ,தளபதி போன்ற படங்களில் நடித்து பெறும் புகழ் பெற்றார் .இவர்  திரைப்பட நடிகர் மற்றும்  தயாரிப்பாளர் ஆவார். இவர் ஏராளமான  மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டு  திரை வாழ்க்கையில், 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மூன்று தேசிய திரைப்பட விருதுகள், 10 கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் பல விருதுகளை வென்றுள்ளார். 
மலையாள சினிமாவின் மெகா ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மம்மூட்டி. மம்மூட்டிக்கு 73 வயதாகிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகி நடிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் அண்மைக்காலமாக எந்தப் படங்களிலும் புதிதாக ஒப்பந்தம் செய்யவில்லை. மம்மூட்டிக்கு அண்மையில் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவி வந்தன. இதனாலேயே சினிமாவுக்கு பிரேக் தர அவர் முடிவு செய்துள்ளார்.
கடைசியாக  மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் உடன் இணைந்து ‘பாட்ரியாட்’ படத்தில் மம்மூட்டி நடித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து மம்மூட்டி நடித்து வந்தார்.
இதில் மம்மூட்டி நடிக்கும் புகைப்படங்களும் வெளியாகின. நயன்தாராவும் இந்த படத்தில் நடிக்கிறார். இப்போது இந்த படத்திலிருந்தும் தற்காலிகமாக மம்மூட்டி விலகியுள்ளார். உடல் நலம் தேறிய பிறகே அதில் நடிப்பாராம். தொடர் சிகிச்சையில் இருக்கும் மம்மூட்டிக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனாலேயே அவர் நடிப்பதை சில காலத்துக்கு நிறுத்தி வைக்க இருக்கிறார்.

Share this story