புற்றுநோயிலிருந்து மீண்ட மம்தா மோகன்தாஸ்... உருக்கமான பேட்டி

புற்றுநோயிலிருந்து மீண்ட மம்தா மோகன்தாஸ்... உருக்கமான பேட்டி

புற்றுநோய் காரணமாக சொந்த ஊரான கேளாவை விட்டு வெளியேறினேன் என நடிகை மம்தா மோகன்தாஸ் உருக்கமாக பேசியுள்ளார். 

தமிழில் 'சிவப்பதிகாரம்', 'குசேலன்', 'குரு என் ஆளு', 'தடையற தாக்க' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர், கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். கடும் உடல் பாதிப்புக்கு உள்ளான அவர், சிகிச்சைக்காக சினிமாவில் இருந்தும் விலகினார். தற்போது புற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ள அவர், பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்போது பேசிய மம்தா, புற்றுநோய் பற்றிய புரிதல் இருந்தாலே அதை எதிர்கொள்ள முடியும். அந்த நோயில் சிக்கியவர்களுக்கு அனுதாபம் நிறைய கிடைக்கும். ஆனால், தான் பெற்றோரின் அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புற்றுநோய் காரணமாக சொந்த ஊரான கேரளாவை காலி செய்து விட்டு வெளியேறியதாகவும், நோய் குணமடைந்தபின்பே ஊருக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். 

Share this story