ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் கைது

ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் கைது 

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலனாது. இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். 

ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் கைது 

இதுதொடர்பாக டெல்லி போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 
 

Share this story