‘மாநாடு’ படத்தில் நடிகர் விஜய்யா ?... புதிய தகவலால் அதிரும் சினிமா உலகம் !

manadu vijay

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு பதிலாக நடிகர் விஜய்தான் நடிக்கவிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’ அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. 

manadu vijay

நீண்ட நாள் கழித்து சிம்பு கம்பேக் கொடுக்கும் படமாக மாநாடு திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் டைம் லூப் கதையை எடுத்து வெங்கட் பிரபு சாதனை செய்துள்ளார். நேற்று வெளியான இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று மட்டும் இப்படத்தை வசூல் 8 கோடியை தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

manadu vijay

இந்நிலையில் இப்படத்தில் சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படத்தில் சிம்புக்கு முன்னர் நடிகர் விஜய் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்காகதான் இந்த படத்தின் கதையை வெங்கட் பிரபு எழுதியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில்,  மாநாடு படத்தில் விஜய்  நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கனவு உலகத்தில் மிதந்து வருகின்றனர். 

Share this story