மீண்டும் இணைகிறதா மணிரத்னம் -சிம்பு கூட்டணி ..?

simbu

இயக்குனர் மணிரத்னம் - நடிகர் சிம்பு கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‛நாயகன்' படத்தில் முதன்முறையாக இணைந்த கமலும், மணிரத்னமும் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது ‛தக்லைப்' படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தக்லைப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

thug life

அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். அந்தவகையில், மணிரத்னம் இயக்கத்தில் ‛செக்கச் சிவந்த வானம், தக்லைப்' என்ற இரண்டு படங்களில் நடித்துள்ள சிம்பு, மூன்றாவது முறையாகவும் நடிக்கப்போகிறார். தற்போது கைவசமுள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு மணிரத்னம் படத்தில் அவர் இணைவார் எனத் தெரிய வந்துள்ளது.

Share this story