மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ரிலீஸ்
1699000681778

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து, பிரபாஸின் 'கல்கி 2898 ஏடி', ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் அவர் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். 'நாயகன்' படத்திற்கு பிறகு, 37 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவுக்காக ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசனின் 234 வது இது உருவாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.