31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாகும் 'மணிசித்ரதாழ்' திரைப்படம்... எந்த படத்தோட ஒரிஜினல் தெரியுமா..?

Manichithrathal

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் சந்திரமுகி திரைப்படம் ஒரு ரீமேக் என்பது எத்தன்னை பேருக்கு தெரியும், மலையாளத்தில், 1993 ஆம் ஆண்டு மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடித்த 'மணிசித்ரதாழ்'  திரைப்படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி. 2005ல் வெளியான சந்திரமுகி மலையாளத்தில் ஒரு சைக்கலாஜிகல் திரில்லராக எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தமிழில் ஹாரர் டிராமாவாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்கு பிறகு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி மணிசித்ரதாழ்' திரைப்பபடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


 

Share this story