குறட்டையால் படாதப்பாடு படும் மணிகண்டன்.. ‘குட் நைட்’ டீசர் வெளியீடு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘குட் நைட்’. ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.
இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்டத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றுள்ளது. குறட்டையால் இன்னலுக்கு ஆளாகும் ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்து பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.