முதலிரவில் தூங்கிவிடும் மாப்பிள்ளை... ‘குட் நைட்’ படத்தின் ஸ்னீக் பிக் காட்சி வெளியீடு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் குறட்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் நைட்’. இந்த படத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முதலிரவின் போது மாப்பிள்ளை தூங்கிவிடுவதால் என்னாவாகிறது என்பது குறித்து காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.
#GoodNight SNEAK PEEK???
— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 9, 2023
Link - https://t.co/E6AucwPnWj
Stars : Manikandan - Meetha - Balaji Shakthivel - Bakhs - Ramesh Thilak
Music : Sean Roldan (JaiBhim)
Direction : Vinayak Chandrasekaran
MAY 12 Theatrical Release. pic.twitter.com/3Cu0b4AqpZ