மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’... டிரெய்லர் வெளியிட்ட ‘லியோ’ இயக்குனர் !

மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் நைட்’ படத்தின் டிரெய்லரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
மனிதனுக்கு பெரும் தொந்தரவை தருவது குறட்டை. இந்த கு்றட்டையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘குட் நைட்’. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் நடிகர் மணிகண்டன் நடித்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.
தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று இப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Good luck to the entire team of #GoodNight 😊
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 2, 2023
Glad to release the trailer
- https://t.co/qcrgdT3l3k
Let’s Celebrate United,
Enna @Manikabali87 😉
ஆரம்பிக்கலாமா 🤜🤛#GoodNightFromMay12