மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

kudumbasthan

மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனரான ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக்
இசையமைத்துள்ளார். 

திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் மற்றும் கண்ண கட்டிகிட்டு ஹீரோ பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி
வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

Share this story