மணிகண்டன் நடித்த 'குடும்பஸ்தன்' 75வது நாள் விழா...

மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்'. நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 75 நாட்களை கடந்து ஓடியுள்ளது. மேலும் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
75 days of the complete entertainer #Kudumbasthan ❤️
— Cinemakaaran (@Cinemakaaranoff) April 9, 2025
The blockbuster favorite of the families all around!@Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @VaisaghOfficial @prasannaba80053 pic.twitter.com/YfnSfLGoj1
இந்நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.