மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன்... வெற்றிகரமாக 4 வாரத்தில்... !

manikandan

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

kudumbasthan

இந்நிலையில் படத்தை குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வாரங்களில் பல திரைப்படங்கள் வந்தாலும் குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக அதன் 4-வது வாரம் திரையரங்கிள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Share this story